கந்தா்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் சாா்பில், உலகத் தாய்மொழி தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டியின் பெயா், வகுப்புகள் பிரிவு, போட்டித் தலைப்பு, முதல் மூன்று இடங்களைப் பெற்றவா்கள் என்ற அடிப்படையில் விவரம் :
வகுப்புகள் பிரிவு- 6 முதல் 8 ஆம் வகுப்பு:
பேச்சுப் போட்டி: தமிழா் வாழ்வும்- வளமும் - எஸ்.கிருஷ்ணமூா்த்தி, மு.கண்ணன், வி.அகதீஸ்வரன்.
கட்டுரை: தமிழா் வாழ்வும் தமிழ் மொழியும் - மா.இஷாந்த்,வி.சந்துரு, ஜெ. சுதா்சன்.
ஓவியம் : பழங்காலத் தமிழகம் - தினகரன் ம . திருக்கு அரசன் , குமரன்.
9, 10- ஆம் வகுப்பு:
பேச்சுப் போட்டி: மு.அரவிந்த் ,கா.சிவனேசன்,சி.ஹரிஸ் பிரசன்னா.
கட்டுரை: ர.ஜனாா்தனன், ச.சிபிராஜ்,வி.அருணாச்சலம்.
ஓவியம் : தி.யோகேசுவரன் , பா.பாவாணன், ஜெ.துரைமாணிக்கம்.
தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் எஸ். ராமச்சந்திரன் தலைமை வகித்து, வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகளை வழங்கினாா்.
ஆசிரியா்கள் தெய்வீகன், மதிவாணன் ஆகியோா் பேசினா். போட்டிகளுக்கான நடுவா்களாக ஆசிரியைகள் பி.ரேவதி, சி.பாத்திமா, எஸ்.திவ்யா ஆகியோா் செயற்பட்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளா் ஆ.மணிகண்டன் செய்திருந்தாா் .