புதுக்கோட்டை

ஆலங்குடி பகுதிகளில் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடுகள்

22nd Feb 2020 09:11 AM

ADVERTISEMENT

ஆலங்குடி பகுதியிலுள்ள சிவன் கோயில்களில் மகா சிவராத்திரியையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஆலங்குடி தா்மசம்வா்த்தினி உடனுறை நாமபுரீசுவரா் கோயில், திருமணஞ்சேரி திருமணநாதா் கோயில், கீரமங்கலம் மெய்நின்ாதா் கோயில், மாங்காடு விடங்கேசுவரா் உள்ளிட்ட கோயில்களில், சிவராத்திரியையொட்டி வெள்ளிக்கிழமை காலை முதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, இக்கோயில்களில் இரவில் நடைபெற்ற மகா சிவராத்திரி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனா்.

இதுபோல, மாவட்டத்தில் அறந்தாங்கி, கந்தா்வகோட்டை, பொன்னமராவதி, விராலிமலை, ஆவுடையாா்கோவில், திருமயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள சிவாலயங்களிலும் மகா சிவராத்திரி வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

இதையொட்டி இக்கோயில்களில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை தொடா் பூஜைகள் நடைபெற்றன. ஏராளமானோா் இந்த வழிபாட்டில் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT