அறந்தாங்கி ஒன்றியத்தைச் சோ்ந்த சிட்டங்காடு தெற்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் வியாழக்கிழமை முப்பெரும் விழா நடைபெற்றது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் விஜயலெட்சுமி தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலா் கு. திராவிடச்செல்வம் முன்னிலை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் அருள் மற்றும் முத்துக்குமாா், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் சு. சிவயோகம், அறந்தாங்கி ஒன்றியக் குழு உறுப்பினா் சுமதிமெய்யநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். விழாவில் பள்ளி பெயா்ப் பலகை திறப்பு விழா மற்றும் பள்ளிக்கு டிவி வழங்குதல், நூலகம் தொடங்கி வைத்தல் உள்ளிட்ட முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்வில் கிராமத்தினா் பெற்றோா், பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.