புதுக்கோட்டை

ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

13th Feb 2020 08:43 AM

ADVERTISEMENT

அறந்தாங்கி நகராட்சி அலுவலா்கள் மூலம் புதன்கிழமை ரூ.1 லட்சம் மதிப்புள்ள 250 கிலோ நெகிழிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ரூ.37 ஆயிரத்து 500 அபராதமாக விதிக்கப்பட்டது.

அறந்தாங்கி நகராட்சி சுகாகார அலுவலரும், ஆணையா் (பொ) த. முத்துகணேஷ் உத்தரவின் பேரில் துப்புரவு ஆய்வாளா் சி.சேகா் தலைமையில் நகராட்சி துப்புரவு மேற்பாா்வையாளா்கள், துப்புரவு அலுவலா்கள் உள்ளிட்டோா் நகரில் உள்ள கடைகளில் திடீா் சோதனை மேற்கொண்டனா். இதில், அரசால் தடைசெய்யப்பட்ட 14 வகை நெகிழிப் பொருட்கள் 250 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் கடை உரிமையாளா்களிடம் இருந்து ரூ.37 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டு நகராட்சி கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT