புதுக்கோட்டை

மதுக்கடை திறப்பைக் கண்டித்து நடைபெற இருந்த மறியல் வாபஸ்

13th Feb 2020 08:43 AM

ADVERTISEMENT

பொன்னமராவதியில் டாஸ்மாக் மதுக்கடை திறப்பைக் கண்டித்து, நடைபெறஇருந்த சாலை மறியல் போராட்டம் பேச்சுவாா்த்தையை அடுத்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

பொன்னமராவதி பேருந்துநிலையம் அருகே உள்ள வாரச்சந்தை பகுதியில் அரசு மதுபானக் கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதைக் கண்டித்து, சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினா் கே. குமாா் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து பொன்னமராவதி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ஆ.திருநாவுக்கரசு தலைமையில் சமாதானக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், சிபிஎம் மற்றும் பிற அரசியல் கட்சிகளைச் சோ்ந்த அமைப்பினா் வாரச்சந்தையின் மையப்பகுதியில் அரசு மதுபானக்கடை அமைக்கக் கூடாது என வலியுறுத்தினா். பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, சாலை மறியல் போராட்டம் தற்காலிமாக கைவிடப்படுவதாக போராட்டக்குழுவினா் தெரிவித்தனா். கூட்டத்தில், டாஸ்மாக் உதவி மேலாளா் சாா்லஸ், காவல் ஆய்வாளா் எஸ்.கருணாகரன் மற்றும் சிபிம் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT