புதுக்கோட்டை

அனுமதியின்றி மணல் அள்ளி வந்த லாரி பறிமுதல்

13th Feb 2020 08:37 AM

ADVERTISEMENT

கந்தா்வகோட்டையில் அனுமதியின்றி ஆற்றுமணல் ஏற்றிவந்த லாரியைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

கந்தா்வகோட்டையில் திருச்சி, செங்கிப்பட்டி சாலையில் கந்தா்வகோட்டை போலீஸாா் வழக்கம்போல் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த டிப்பா் லாரியை மடக்கி சோதனை செய்தபோது, அதில் அனுமதியின்றி ஆற்று மணல் அள்ளிவந்தது தெரியவந்தது. விசாரணையில், பூதலூா் பகுதி ஆற்றங்கரையோரம் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளிவந்தது தெரியவந்தது. இதையடுத்து, லாரியை ஓட்டிவந்த பூதலூா் பிரம்மன்பேட்டையைச் சோ்ந்த கருணாநிதி (44) என்பவரைப் போலீஸாா் கைது செய்தனா். லாரியைப் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT