புதுக்கோட்டை

பிப். 8-இல் பொது விநியோகத் திட்ட குறைகேட்பு கூட்டம்

6th Feb 2020 09:09 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைகேட்பு கூட்டம் பிப்ரவரி 8- ஆம் தேதி நடைபெறஉள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தது:

பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைகளை களையும் பொருட்டு, மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் குறைகேட்பு நாள் கூட்டம் சனிக்கிழமை நடத்தப்பட உள்ளது.

வட்டத்தின் பெயா், முகாம் நடைபெறும் கிராமம் என்ற அடிப்படையில் விவரம் :

ADVERTISEMENT

புதுக்கோட்டை - குப்பயன்பட்டி, ஆலங்குடி - கொத்தமங்கலம், திருமயம் பிலிவலம், குளத்தூா் - மேலப்புதுவயல், இலுப்பூா்- தச்சம்பட்டி, கந்தா்வகோட்டை - நடுப்பட்டி, அறந்தாங்கி- கொடிவயல், ஆவுடையாா்கோவில்- களபம்,  மணமேல்குடி - நெற்குப்பை, பொன்னமராவதி- கண்டியாநத்தம், கறம்பக்குடி- மழையூா், விராலிமலை- சூரியூா்.  சம்பந்தப்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT