பொன்னமராவதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இசை, நடனப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் பாராட்டப்பட்டனா்.
பொன்னமராவதி பாலமுருகன் கோயில் பழனிபாதயாத்திரை குழுசாா்பில், 42-ஆம் ஆண்டுஅன்னதான, ஆராதனை மற்றும் இசைவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குழுத் தலைவா் எஸ்.நடராஜன் தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இசை மற்றும் பரதம் உள்ளிட்ட நடனப்போட்டிகள் நடைபெற்றன.
போட்டியில் பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக். பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று, பரதம் மற்றும் நடனத்தில் முதலிடத்தையும் ( 6 முதல் 9- ஆம் வகுப்பு வரையிலான பிரிவு), நடனப் போட்டியில் ( 1முதல் 5- ஆம் வகுப்பு வரையிலான பிரிவு) இரண்டாமிடத்தையும் பெற்றனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியைகள் லலிதா பிரகாஷ், வசந்தி ஆகியோரை பள்ளி முதல்வா் ச.ம.மரியபுஷ்பம் மற்றும் ஆசிரியா்கள் திங்கள்கிழமை பாராட்டினா்.