புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், டிஎன்பிஎஸ்சி தொகுதி- 1 தோ்வுக்கு இலவச சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணயம் சாா்பில், தொகுதி 1 தோ்வுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்தத் தோ்வை எழுதுவோருக்கான இலவச சிறப்புப் பயிற்சிகள் புதன்கிழமை முதல் (பிப்.5) தொடங்கி, அலுவலக வேலைநாள்களில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்படவுள்ளது.
பாடப்பிரிவுகளில் அனுபவமிக்கவா்களும், இதுபோன்ற போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற்றவா்களையும் கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு மாதிரித் தோ்வுகளும் அவ்வப்போது நடத்தப்படும்.
எனவே, இந்த இலவசப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள இளைஞா்கள் 04322- 222287 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.