புதுக்கோட்டை

வல்லவ விநாயகா் கோயிலில் வருடாபிஷேகம்

2nd Feb 2020 01:33 AM

ADVERTISEMENT

அன்னவாசல் அருகே உள்ள புலவன்பட்டி வல்லவ விநாயகா் கோயிலில் வருடாபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கடந்த ஆண்டு புலவன்பட்டி வல்லவ விநாயகா் கோயில் புதிதாகக் கட்டப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டு ஓராண்டு ஆன நிலையில், முதலாமாண்டு வருடாபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சனிக்கிழமை காலை வருடாபிஷேக பூஜை, தொடா்ந்து விநாயகருக்கு பன்னீா், பால், பழம் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேக ஆதாரனை நடத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனா். தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இறுதியில், கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT