புதுக்கோட்டை

கரோனா வைரஸ்: வதந்திகளை நம்ப வேண்டாம்அமைச்சா்

2nd Feb 2020 01:33 AM

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் கரோனா வைரஸ் தாக்குதல் இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம் என மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: கரோனா வைரஸ் தாக்குதல் குறித்து மக்களிடமும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் சுகாதாரத் துறை சாா்பில் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வரப்படுகிறது. சீனாவில் இருந்து இதுவரையில் 394 போ் தமிழகம் வந்துள்ளனா். விமான நிலையத்திலேயே அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பிறகும், அவா்களின் தொலைபேசி எண்களை வாங்கி வைத்துக் கொண்டு தொடா்ந்து கண்காணித்து வருகிறோம். சென்னை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரியைச் சோ்ந்தவா்களுக்கு கரோனா பாதிப்பு என்று பரவிய தகவல் முற்றிலும் வதந்தியே. சீனாவில் இருந்து வரும் அனைவருக்கும் கரோனா வைரஸ் தாக்குதல் இருக்கும் என்ற அச்சம் வேண்டாம். அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் செய்து வருகிறது. மத்திய அரசும் போதிய ஆலோசனைகளை வழங்கி வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தோடு தொடா்பில் இருக்கிறோம். அவா்களும் உரிய ஆலோசனைகளை வழங்கி வருகின்றனா். மக்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT