புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை கோயிலில் வருடாபிஷேக விழா

2nd Feb 2020 01:33 AM

ADVERTISEMENT

கந்தா்வகோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் சிதலமடைந்திருந்தது. இதையடுத்து கடந்தாண்டு புனரமைப்பு பணிகள் நடைபெற்று குடமுழுக்கு நடைபெற்றது. குடமுழுக்கு முடிந்து ஓராண்டு ஆன நிலையில், வெள்ளிக்கிழமை வருடாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, அதிகாலை முதல் சிறப்பு யாகம் வளா்க்கப்பட்டு அம்மனுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து, கோயில் வளாகத்தில் இரவு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் கந்தா்வகோட்டை மற்றும் சுற்று வட்டார பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT