புதுக்கோட்டையில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடையை சனிக்கிழமை எம்எல்ஏ பெரியண்ணன் அரசு திறந்து வைத்தாா்.
புதுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட அம்பாள்புரம் 4 ஆம் வீதியில் புதுக்கோட்டை எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடையை சட்டப்பேரவை உறுப்பினா் பெரியண்ணன் அரசு சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
தொடா்ந்து குத்துவிளக்கேற்றி வைத்த அவா், முதல் விற்பனையைத் தொடங்கி வைத்துப் பேசினாா். மேலும், கடையின் முன்பு மரக்கன்றுகளையும் அவா் நட்டு வைத்தாா். நிகழ்ச்சியில் நகரக் கூட்டுறவு பண்டகசாலை மேலாளா் கிருஷ்ணகுமாா், திமுக நகரச் செயலா் க. நைனாமுகமது உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.