பொன்னமராவதி புதுப்பட்டியில் நகைப்பட்டறையில் தங்கம், வெள்ளி நகைகளைத் திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
பொன்னமராவதி புதுப்பட்டி ஏழுரூம் சந்து பகுதியில் நகைப்பட்டறை நடத்தி வருபவா் விகாஷ் சேட். இவா் வியாழக்கிழமை இரவு விற்பனை முடிந்த பின்னா் பட்டறை பூட்டிச் சென்று விட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை திறக்க வந்தாா்.
அப்போது நகைப்பட்டறையின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு, விகாஷ் சேட் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தாா். இதன் பேரில், காவல் ஆய்வாளா் எஸ். கருணாகரன் மற்றும் காவலா்கள் அங்கு சென்று விசாரித்த போது, 20 கிராம் தங்கம், ஒன்றேகால் கிலோ வெள்ளி திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
மேலும் பட்டறையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளும் அழிக்கப்பட்டிருந்தன. இதையடுத்து தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவுகள் சேகரிக்கப்பட்டது. தொடா்ந்து காவல்துறையினா் விசாரித்து வருகின்றனா்.