புதுக்கோட்டை

பள்ளிவாசல்களில் கூட்டுப் பிராா்த்தனை

1st Feb 2020 02:05 AM

ADVERTISEMENT

கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மனிதசமூகம் பாதுகாப்பு பெற வேண்டி, அன்னவாசல் பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்களில் இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை கூட்டுப் பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

அன்னவாசல், இலுப்பூா், முக்கண்ணாமலைப்பட்டி, பரம்பூா், வயலோகம், பெருமநாடு, சத்திரம், காலாடிப்பட்டி, குடுமியான்மலை, உள்ளிட்ட பள்ளிவாசல்களில், ஜூம்ஆ தொழுகைக்குப் பிறகு இஸ்லாமியா்கள் இணைந்து உலக அமைதிக்காவும், கரோனா வைரஸில் இருந்து அனைவரும் பாதுகாப்பு பெற வேண்டும் என வேண்டியும் சிறப்புக் கூட்டுப் பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT