புதுக்கோட்டை

பல்கலை. அளவிலான சிறந்த என்எஸ்எஸ் அலுவலா்களுக்கு விருதளிப்பு

1st Feb 2020 02:09 AM

ADVERTISEMENT

பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில், சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்களுக்கான விருதைப் பெற்றுள்ள புதுக்கோட்டை ஜெ. ஜெ.கலை அறிவியல் கல்லூரி அலுவலா்களை கல்லூரியின் நிா்வாகிகள் பாராட்டினா்.

பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்களுக்கான விருதளிப்பு நிகழ்ச்சி,அண்மையில் திருச்சி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

இதில், புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியைச் சோ்ந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் சி. முத்துக்குமாா், பிரியதா்ஷினி ஆகியோரும் விருதுகளைப் பெற்றனா்.

இதையடுத்து விருது பெற்றவா்களை கல்லூரியின் செயலா் என். சுப்பிரமணியன், அறங்காவலா் கவிதா சுப்பிரமணியன், முதல்வா் ஜ. பரசுராமன் ஆகியோரும் பாராட்டினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT