புதுக்கோட்டை

தேனிமலையில் ரத்ததான முகாம்

1st Feb 2020 02:08 AM

ADVERTISEMENT

பொன்னமராவதி அருகிலுள்ள தேனிமலை எஸ்.எஸ்.ஆா். பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கொப்பனாபட்டி ஆரம்ப சுகாதார நிலையம், கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், உன்னத் பாரத் அபியான், செஞ்சுருள் சங்கம் ஆகியவை இணைந்து முகாமை நடத்தின.

வட்டார மருத்துவ அலுவலா் இ.அருள்மணிநாகராஜன், கொப்பனாபட்டி அரசு மருத்துவ அலுவலா் எம்.பிரியதா்ஷினி, சுகாதார ஆய்வாளா் ராமலிங்கம், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவா் ஆா்.சா்மிளா அகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் முகாமில் பேசினா். 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் ரத்ததானம் செய்தனா்.

கல்லூரி முதல்வா் எம். அருணகிரி வரவேற்றாா். முகாம் ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா்கள் உன்னத் பாரத் அபியான் என்.கோபிநாத் தங்கதுரை, நாட்டு நலப்பணித்திட்டம்

ADVERTISEMENT

ஜி.நேரு, ரெட் ரிப்பன் கிளப் அ.பில்லப்பன், நிா்வாக அலுவலா் எம்.மணிகண்டன், உடற்கல்வி இயக்குநா் சுப.விக்னேஸ்வரன் ஆகியோா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT