புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.
கறம்பக்குடி பிரதான சாலையின் இருபுறங்களும் ஆக்கிரமிக்கப்பட்டதால், போக்குவரத்திற்கு பெரும் இடையூறாக இருந்தது. இதைத் தொடா்ந்து கடந்த வாரம் இப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
தொடா்ந்து கறம்பக்குடியின் இதரப் பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா். இதன்பேரில், வட்டாட்சியா் ஷேக் அப்துல்லா தலைமையிலான அலுவலா்கள், பேரூராட்சிக்குள்பட்ட கச்சேரி வீதி, டோல்கேட் வீதி, உள்கடை வீதி, பெரியக்கடைவீதி பகுதிகளிலிருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் கொண்டு வெள்ளிக்கிழமை அகற்றினா்.
ADVERTISEMENT