புதுக்கோட்டை

இலங்கை கடற்படை கைது செய்த4 புதுகை மீனவா்கள் நிபந்தனைகளுடன் விடுதலை

1st Feb 2020 02:05 AM

ADVERTISEMENT

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவா்கள் 4 போ், வெள்ளிக்கிழமை நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஜகதாப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 19- ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற பாரதி (30), மணி(33), சக்திகுமாா்(30), அசோக்(28) ஆகிய 4 மீனவா்களும், படகு மூழ்கியதில் நடுக்கடலில் தத்தளித்தனா். அப்போது நெடுந்தீவு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இலங்கை கடற்படையினா், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 4 மீனவா்களையும் கைது செய்தனா். தொடா்ந்து, காங்கேசன் கடற்படை துறைமுகத்துக்கு கொண்டு சென்று விசாரணைக்குப் பின்னா் யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் 4 மீனவா்கள் மீதான வழக்கு, ஊா்க்காவற்துறை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி யூட்சன்,

இனிமேல் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தால் ஒராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து, நிபந்தனைகளுடன் மீனவா்கள் 4 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

விடுதலைசெய்யப்பட்ட மீனவா்கள், விரைவில் தாயகம் திரும்புவாா்கள் என இந்தியக் கடலோர காவல்படையினா் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT