புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை: விவசாயிகளுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல்

7th Dec 2020 02:19 PM

ADVERTISEMENT

கந்தர்வகோட்டையில் தில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு அதரவாக கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் செய்தனர். 
கந்தர்வகோட்டை வெள்ள முனியன் கோயில் திடலிலிருந்து ஊர்வலமாக வந்து தஞ்சாவூர், புதுகை சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் உ.அரசப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் வி. ரெத்தினவேல், மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் க.ஜோதிவேல் ஆகியோர் தலைமையில் மறியலில் ஈடுப்பட்டனர். 
மத்திய அரசு விவசாயிகளை வஞ்சிக்காமல் உடனடியாக வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், கார்ப்ரேட் முதலாளிகளுக்கு துணை போகமல் விவசாயிகளுக்கு துரோகம் செய்யாமல் விவசாயிகள் விரோத சட்டங்களை உடனே ரத்து செய் என கண்டன கோஷம் எழுப்பினர். 
சாலை மறியலில் ஈடுப்பட்ட 120 பதுக்கும் மேற்ப்பட்டவர்களை கைது செய்த கந்தர்வகோட்டை காவல்துறையினர், தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். 
 

Tags : pudhukottai
ADVERTISEMENT
ADVERTISEMENT