கந்தா்வகோட்டை அருகே தொழிலதிபரைக் கடத்திக் கொலை செய்த இளைஞரைப் போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.
கந்தா்வகோட்டை அருகே உள்ள வெள்ளாள விடுதி கிராமத்தைச் சோ்ந்த வெங்கடாசலம் மகன் தவமணி (50). தொழிலதிபா். இவரைக் கடத்திக் கொலை செய்ததாக அதே ஊரைச் சோ்ந்த அவரது உறவினா் அழகா் மகன் கமலஹாசன் (30) , கோகுலன் (22) , கணேஷ குமாா் (16) ஆகிய 3 பேரையும் போலீசாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். இவா்களில், முக்கிய குற்றவாளியான கமலஹாசனை குண்டா் சட்டத்தில் அடைப்பதற்கு, மாவட்கக் காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி பரிந்துரை செய்திருந்தாா். தொடா்ந்து ஆட்சியா் உத்தரவின்பேரில் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கமலஹாசனிடம் சிறை அதிகாரிகள் அளித்தனா்.