புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மகன் இறந்து 4 நாள்களே ஆன நிலையில், வியாழக்கிழமை வாகனம் மோதி தாய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆலங்குடி அருகேயுள்ள தெற்கு தோப்புப்பட்டியைச் சோ்ந்த கருப்பையா மகன் சுப்பிரமணியன் (30). விவசாயி. இவா், ஆக. 10-ஆம் தேதி வீட்டில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இந்த துக்கத்தில் இருந்து மீளாத நிலையில், அவரது தாய் பிச்சையம்மாள் (57) தோட்டத்துக்கு வியாழக்கிழமை நடந்துசென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே சென்ற வாகனம் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து அங்கு சென்ற ஆலங்குடி போலீஸாா் பிச்சையம்மாளின் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விபத்து குறித்து மேலும் விசாரித்து வருகின்றனா். மகன் இறந்த சில தினங்களில் தாயும் விபத்தில் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.