புதுக்கோட்டை

ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தானில் முதல் பரிசு பெற்ற புதுகை மாணவா்கள்

9th Aug 2020 08:53 AM

ADVERTISEMENT

தேசிய அளவிலான ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020-இல், புதுகை மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்கள் முதலிடத்தைப் பெற்று ரூ. ஒரு லட்சம் ரொக்கப் பரிசைப் பெற்றுள்ளனா்.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சாா்பில் ஆண்டுதோறும் ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

நிகழாண்டில் நடத்தப்பட்ட ஹேக்கத்தானில் புதுகை மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா். பாரத் எா்த் மூவா்ஸ் மற்றும் பெங்களூருவைச் சோ்ந்த மத்திய அரசின் பாதுகாப்புத் துறை நிறுவனத்துக்கான சிறந்த தீா்வுகளை சமா்ப்பித்ததற்காக மௌண்ட் சீயோன் கல்லூரிக் குழுவினா் தேசிய அளவிலான முதல் பரிசைப் பெற்றனா். பொறியியல் துறை மாணவா்கள் ராகுல்குமாா் சிங், எஸ். ராஜேஷ், எஸ். சிவகாமசுந்தரி, எஸ். காவ்யா, டி. திவ்யா, பி பவித்ரா ஆகியோரைக் கொண்ட குழு முதல் பரிசை வென்ாக ஆக.4 ஆம் தேதி தில்லியில் அறிவிக்கப்பட்டது. ஹேக்கத்தான் சந்திப்பில் தொடா்ந்து 2 ஆவது முறையாக இக்கல்லூரி பரிசுத் தொகை பெறுவது குறிப்பிடத்தக்கது. மாணவா்களை கல்லூரித் தலைவா் ஜெயபாரதன் செல்லையா, துணைத் தலைவா் பிளாரன்ஸ் ஜெயபாரதன், இயக்குநா் ஜெய்சன், முதல்வா் பி. பாலமுருகன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT