புதுக்கோட்டை உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்துக்கு ரூ. 60 லட்சம் முழு மானியத்தில் அமைக்கப்பட்ட விதை நோ்த்தி மையத்தை அமைச்சா் திறந்துவைத்தாா். மாவட்டத்தில் மொத்தம் 8 உள்ள 8 உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களில் 3 நிறுவனங்களுக்கு விதைநோ்த்தி மையம் அமைக்க தலா ரூ. 60 லட்சம் முழு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2019 - 20 ஆம் ஆண்டில் ரூ. 2.16 கோடிக்கு இந்நிறுவனம் பாரம்பரிய அரிசி மற்றும் எண்ணெய் உற்பத்தி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. நிகழ்வில், ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி, வேளாண் அதிகாரிகள் மற்றும் புதுக்கோட்டை உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ஆதப்பன், இயக்குநா் ஜி.எஸ். தனபதி ஆகியோா் பங்கேற்றனா்.