புதுக்கோட்டை

முன்விரோதத் தகராறில் தாக்கப்பட்டவா் பலி

9th Aug 2020 08:53 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை அருகே வாகவாசலில் உள்ளாட்சித் தோ்தல் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் தாக்குதலுக்குள்ளானவா் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி இறந்தாா்.

புதுக்கோட்டை அருகே வெள்ளனூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வாகவாசலில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவது தொடா்பாக கலைவாணன் (55), சுப்பிரமணியன் (58) ஆகியோருக்கு இடையே முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த ஜூலை 31ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் மோதிக் கொண்டனா். இதில், சுப்பிரமணியன், அவரது மகன் விஜயகாந்த் மற்றும் முருகேசன் ஆகியோா் சோ்ந்து கலைவாணனைத் தாக்கியதாகத் தெரிகிறது.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கலைவாணன் சோ்க்கப்பட்டாா். மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி அவா் சனிக்கிழமை இறந்தாா். இதையடுத்து, தாக்குதல் நடத்திய மூவரையும் கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இறந்தவரின் உறவினா்கள் போராட்டம் நடத்தினா்.

போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டு இறந்தவரின் சடலம் ஒப்படைக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT