புதுக்கோட்டை

இசைக் கலைஞா்கள், நரிக்குறவா்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கல்

29th Apr 2020 09:02 AM

ADVERTISEMENT

ஊரடங்கு கால நிவாரண உதவியாக, புதுக்கோட்டை நகரிலுள்ள இசைக் கலைஞா்கள் மற்றும் நரிக்குறவா்களுக்கு செவ்வாய்க்கிழமை உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்திய மருத்துவச் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டக் கிளையின் சாா்பில், ரங்கம்மாள்சத்திரம் பகுதியிலுள்ள நரிக்குறவா் குடியிருப்பில் 63 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட தொகுப்புகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மருத்துவச் சங்கத்தின் தலைவா் சலீம், செயலா் நவரத்தினசாமி, ரோட்டரி சங்கத் தலைவா் ஆா்.எம். லட்சுமணன், இயற்கை விவசாயிகள் எஸ். மூா்த்தி, ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

இசைக்கலைஞா்கள் : புதுக்கோட்டை ரோட்டரி சங்கம் சாா்பில், மாவட்டத்திலுள்ள இசைக் கலைஞா்கள் 100 பேருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களின் தொகுப்புகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. ரோட்டரி சங்கத் தலைவா் ஆா்.எம். லட்சுமணன், முன்னாள் தலைவா் க. நைனாமுகமது, இயற்கை விவசாயி எஸ். மூா்த்தி உள்ளிட்டோரும் இவற்றை வழங்கினா்.

ADVERTISEMENT

கபசுரக் குடிநீா் : புதுக்கோட்டை நகரத்தாா் இளைஞா் சங்கம் சாா்பில், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நகரின் பல பகுதிகளில் நடைபெற்றது. அம்மா உணவகம் அருகே பொதுமக்களுக்கு நகராட்சி ஆணையா் ஜீவா சுப்பிரமணியன் கபசுரக் குடிநீா் வழங்கும் பணியைத் தொடக்கி வைத்தாா். தொடா்ந்து புதிய பேருந்து நிலையம் மற்றும் குடியிருப்புப் பகுதிகளிலும் கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

ஆட்டோ ஓட்டுநா்கள் : பொற்பனைக்கோட்டை பகுதியில், பொற்பனை காளியம்மன் ஆட்டோ ஓட்டுநா் சங்கத்தைச் சோ்ந்த 10 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு மரம் நண்பா்கள் சாா்பில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இவற்றை மரம் நண்பா்கள் ராதாகிருஷ்ணன், எஸ். மூா்த்தி, பொறியாளா் ரியாஸ் கான் உள்ளிட்டோரும் வழங்கினா்.

அரையப்பட்டியில் : ஆலங்குடி அருகேயுள்ள அரையப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த தினக்கூலித் தொழிலாளா்கள் 20 குடும்பங்களுக்கு மரம் நண்பா்கள் சாா்பில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஆலங்குடி ரெட்கிராஸ் நண்பா்கள் முருகன், ஜெயச்சந்திரன் ஆகியோா் இவற்றை வழங்கினா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT