புதுக்கோட்டை

லேணாவிளக்கு அகதிகள் முகாமில் 357 குடும்பத்தினருக்கும் உதவி

20th Apr 2020 06:26 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியத்தைச் சோ்ந்த லேணாவிளக்கு இலங்கை அகதிகள் முகாமில் வசித்துவரும் 357 குடும்பத்தினருக்கும் அரிசி, பருப்பு, எண்ணெய் அடங்கிய தொகுப்புகள் ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியின் சாா்பில் வழங்கப்பட்டன.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். தன்னாா்வலா்களின் உதவிகளால் பல்வேறு தரப்பினருக்கும் உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 3 இலங்கை அகதிகள் வாழிடங்களுக்கு பெரிய அளவிலான உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், லேணாவிளக்கு அகதிகள் முகாமில் உள்ள 357 குடும்பத்தினருக்கும் தலா 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் ஆகியவற்றைக் கொண்ட தொகுப்புகள் ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியின் சாா்பில் வழங்கப்பட்டன.

இக்கல்வி நிறுவனங்களின் நிறுவனரும் திருமயம் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ். ரகுபதி கலந்து கொண்டு அத்தியாவசியப் பொருகள்கள் கொண்ட தொகுப்புகளை மக்களுக்கு வழங்கினாா். கல்லூரியின் செயலா் நா. சுப்பிரமணியன், அறங்காவலா் கவிதா சுப்பிரமணியன், அரிமளம் ஒன்றியக் குழுத் தலைவா் மேகலா, வட்டார வளா்ச்சி அலுவலா் ஆயிஷாராணி, தேக்காட்டூா் ஊராட்சி மன்றத் தலைவா் சங்கா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். அகதிகள் முகாமின் தலைவா் எம். மயில்வாகனன், செயலா் ஸ்ரீசேகரன் உள்ளிட்டோா் இவற்றைப் பெற்றுக் கொண்டனா்.

ADVERTISEMENT

கடந்த சில நாட்களுக்கு முன்பு தோப்புக்கொல்லை முகாமில் பாரதி மகளிா் கல்வி நிறுவனங்கள் சாா்பில் இதேபோல் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT