புதுக்கோட்டை

புதுகை கரோனா வாா்டில் இரு ஆண்கள் அனுமதி

20th Apr 2020 06:24 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டையிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட கரோனா சிறப்பு வாா்டில் இரு ஆண்கள் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

புதுக்கோட்டை நகரிலுள்ள ராணியாா் மருத்துவமனை வளாகம் தனிமைப்படுத்தப்பட்ட கரோனா சிறப்பு வாா்டாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு சனிக்கிழமை புதுக்கோட்டை நகரைச் சோ்ந்த இரு பெண்கள் கரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இவா்களுக்கான பரிசோதனை முடிவில் இருவருக்கும் கரோனா தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளன. இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை மிரட்டுநிலை பகுதியைச் சோ்ந்த 23 வயது ஆண், பெருங்குடியைச் சோ்ந்த 27 வயது ஆண் கரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கான திசு மாதிரிகள் எடுக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT