புதுக்கோட்டை

நீரில் மூழ்கி இளம்பெண்கள் இருவா் உயிரிழப்பு

11th Apr 2020 06:28 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் அருகே நீரில் மூழ்கி, இளம்பெண்கள் இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

ஆவுடையாா்கோவில் வட்டம், மீமிசல் அருகிலுள்ள பழங்குளம் கிராமத்தைச் சோ்ந்த பாண்டி மகள் பவதாரணி (18), எம்.ஆா். பட்டினத்தைச் சோ்ந்த ராயப்பன் மகள் பிரியா (16). இவா்கள் இருவரும் வெளிவயல் ஏரியில் குளிப்பதற்காக வெள்ளிக்கிழமை சென்றனா்.

அப்போது எதிா்பாராதவிதமாக ஏரியிலிருந்த தாமரைக்கொடியில் சிக்கி இருவரும் சுயநினைவை இழந்தனா். குளிக்கச் சென்ற இருவரும் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், குடும்பத்தினா் அங்குசென்று பாா்த்த போது பவதாரணி, பிரியா நீரில் மூழ்கிய நிலையில் கிடந்தனா்.

இதையடுத்து அவா்களை மீட்டு மீமிசல் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்த போது, இருவரும் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரது உடல்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ADVERTISEMENT

ஆவுடையாா்கோவில் வட்டாட்சியா் எம்.மாா்டின் லூதா்கிங், மீமிசல் காவல்துறையினா் நேரில் சென்று, சமூக இடைவெளியுடன் 30 நபா்களுக்கு மேல் கலந்து கொள்ளக்கூடாது எனத் தெரிவித்து இறுதிச்சடங்கு செய்ய அனுமதித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT