புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவப் பணியாளா்கள், துப்புரவுப் பணியாளா்கள் 150 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, முகக்கவசம், கையுறை, சோப்புகளைக் கொண்ட தொகுப்புகளை திமுக சட்டப்பேரவை உறுப்பினா் பெரியண்ணன் அரசு திங்கள்கிழமை வழங்கினாா்.
அப்போது, நகர திமுக செயலா் க. நைனாமுகமது, சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினா் த. சந்திரசேகரன், மாவட்ட திமுக பொருளாளா் செந்தில் உள்ளிட்டோரும் உடனிருந்தனா். தொடா்ந்து அனைத்து அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் பணியாளா்கள் மற்றும் துப்புரவுப் பணியாளா்களுக்கும் இந்தத் தொகுப்புகள் வழங்கப்படும் என திமுகவினா் தெரிவித்தனா்.