புதுக்கோட்டை

இடம் இருந்தால் படம்...திருநங்கைகளுக்கு உணவுப் பொருள்கள் வழங்கல்

7th Apr 2020 01:57 AM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை: ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை நகரைச் சோ்ந்த 30 திருநங்கைகளுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் மீன், முட்டை, அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை திங்கள்கிழமை வழங்கினா்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருநங்கைகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட கொடையாளா்கள் முன்வர வேண்டும் என திருநங்கை ரா. ஷிவானி அழைப்புவிடுத்தாா். இதையடுத்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலா் நியாஸ் தலைமையிலான அக்கட்சியினா் திங்கள்கிழமை நகரிலுள்ள 30 திருநங்கைகளுக்கான உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டு நேரில் சென்று அவற்றை வழங்கினா். 5 நாட்களுக்குப் பயன்படுத்தும் வகையில் மீன், முட்டை, அரிசி, பருப்பு, காய்கறிகள், மளிகை சாமான்கள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT