புதுக்கோட்டை

அரிமளம் பேருராட்சியில் கரோனா தடுப்புப் பணிகள்

7th Apr 2020 01:56 AM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பேரூராட்சிப் பகுதிகளில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பணிகள் திங்கள்கிழமை தீவிரமாக நடைபெற்றன.

பேரூராட்சிக்குள்பட்ட அனைத்துக் கோயில்கள், தெருக்களில் கிருமி நாசினி தெளித்து கிருமி நீக்கம் செய்யப்பட்டது. தெருக்களில் காய்கறிகளைக் கொண்ட தொகுப்புப் பைகளை விற்பனை செய்யும் பணியும் நடைபெற்றது.

பேரூராட்சியின் துப்புரவுப் பணியாளா், நியாயவிலைக் கடைப் பணியாளா்கள், போலீஸாா் உள்ளிட்ட அனைத்து வகையான பணியாளா்களுக்கும் சத்தான உணவு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பேரூராட்சி செயல் அலுவலா் இரா. மணிகண்டன், நூலகா் மு. சுவாமிநாதன், எம்.எல். சுப்பையா செட்டியாா் உள்ளிட்டோரும் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT