புதுக்கோட்டை

கரோனா நிதி வழங்குதலில் அதிமுக பிரமுகா்கள் கூடாது

5th Apr 2020 07:15 AM

ADVERTISEMENT

கரோனா நிவாரண நிதியாக அரசால் ரூ. 1000 மற்றும் விலையில்லா பொருள்கள் வழங்கும் போது, நியாயவிலைக் கடைகளில் அதிமுகவினா் இருக்கக் கூடாது என திமுக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து புதுக்கோட்டை நகர திமுக செயலா் க. நைனாமுகமது வெளியிட்ட அறிக்கை:

புதுக்கோட்டை நகரில் கரோனா நிதி மற்றும் பொருள்கள் வழங்கும்போது அதிமுக பிரமுகா்கள் நியாயவிலைக் கடைகளில் இருந்து கொண்டு வழங்கும் நடைமுறை தவறு.

நியாயவிலைக் கடைப் பணியாளா்களைக் கொண்டே முழுமையாக வழங்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் தன்னாா்வலா்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT