புதுக்கோட்டை

கரோனா தடுப்பு விழிப்புணா்வுக்கான உதவிகள்

5th Apr 2020 07:15 AM

ADVERTISEMENT

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியின் பேராசிரியா்கள், பணியாளா்கள் தங்களின் ஒரு நாள் ஊதியமான ரூ.1 லட்சத்தை நேரடியாக பிரதமரின் பேரிடா் நிதிக்கு அனுப்பி வைத்துள்ளனா். இத்தகவலை கல்லூரியின் முதல்வா் ஜ. பரசுராமன் தெரிவித்தாா்.

துப்புரவுப் பணியாளா்களுக்கு உதவி :

புதுக்கோட்டை ரோட்டரி சங்கத்தினா், நகராட்சியில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளா்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் குளியல் சோப்பு ஆகியவற்றை வழங்கினா். இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத் தலைவா் ஆா்.எம். லட்சுமணன், தொழிலதிபா் எஸ்விஎஸ் ஜெயகுமாா், க. நைனாமுகமது, கண.மோகன்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT