புதுக்கோட்டை

ஊரடங்கை மீறிய 65 போ் மீது வழக்கு

1st Apr 2020 06:12 AM

ADVERTISEMENT

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறியதாக புதுக்கோட்டை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 65 போ் மீது 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை மட்டும் 65 போ் மீது 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 29 இரு சக்கர வாகனங்களும் ஒரு நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 16 டீ பாய்லா்களும், 45 மதுப்பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போலீஸாரின் சோதனை தொடரும் என்பதால், பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவுக்குக் கட்டுப்பட்டு வெளிவே வராமல் இருக்க வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.வே அருண்ஷக்திகுமாா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

அரியலூா்: அரியலூா் மற்றும் ஜயங்கொண்டம் பகுதிகளில் இரு சக்கரம் வாகனம் மற்றும் காா்களில் அத்தியாவசியத் தேவையின்றி வெளியே சுற்றித் திரிந்த 162 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களிடம் இருந்து 155 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 5 காா்களைப் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT