புதுக்கோட்டை

அன்னவாசல் வட்டார விவசாயிகள் கண்டுணர்வு பயணம்

22nd Sep 2019 03:39 AM

ADVERTISEMENT

 அன்னவாசல் வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) 2018-19ம் ஆண்டு மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் அன்னவாசல் வட்டாரத்தை சேர்ந்த 50 விவசாயிகள் விவசாய தொழில்நுட்பங்கள் குறித்து நேரடியாக அறிந்து கொள்ள கண்டுணர்வு பயணமாக புதுக்கோட்டை மாவட்டம், மச்சுவாடியில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையத்திற்கு அண்மையில் அழைத்துச் செல்லப்பட்டனர். 
இதில் உதவி பேராசிரியர் சீபா கோழி இனங்களை தேர்வு செய்தல், கொட்டகை அமைத்தல், கோழிக்குஞ்சு பராமரிப்பு, கோழிப் பண்ணை மற்றும் தீவன மேலாண்மை, நோய் 
பராமரிப்பு, தடுப்பூசி முறைகள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கினார் . 
மேலும் விவசாயிகள் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள  நாட்டுக் கோழி வளர்ப்பு பண்ணை, நாட்டுக்கோழிகளின் வகைகள், வான்கோழி பண்ணை, செம்மறியாடு பண்ணை, மற்றும் பண்ணை அமைக்கும் முறைகள், பராமரிப்பு முறைகள் குறித்து நேரடியாக பார்வையிட்டு விளக்கம் பெற்றனர்.
பயணத்திற்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் த.லட்சுமிபிரபா, உதவி தொழில்நுட்ப மேலாளர் ந. உமாமகேஸ்வரி, ராஜு, செல்வி தீபா ஆகியோர் செய்திருந்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT