ஆலங்குடி அருகேயுள்ள கீரமங்கலம் மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமையை கொண்டாடும் வகையில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.