புதுக்கோட்டை

பொன்னமராவதியில் நாளை மின்தடை

17th Sep 2019 09:01 AM

ADVERTISEMENT

பொன்னமராவதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை (செப். 18) அன்றும், காரையூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 17) அன்றும் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் முருகேசன் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
கொன்னையூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் செவலூர், கோவனூர், செம்பூதி, கொப்பனாபட்டி, ஆலவயல், அம்மன்குறிச்சி, கண்டியாநத்தம், தூத்தூர், தொட்டியம்பட்டி, மேலைச்சிவபுரி, வேந்தன்பட்டி, வேகுப்பட்டி, காட்டுப்பட்டி மற்றும் பொன்னமராவதி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது.
அதுபோல மேலத்தானியம் துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் காரையூர், மேலத்தானியம், கீழத்தானியம், ஒலியமங்கலம், சடையம்பட்டி, இடையாத்தூர், மரவாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT