புதுக்கோட்டை

பெருங்களூரில் 77 மி.மீ மழை

17th Sep 2019 09:03 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் திங்கள்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப் பொழிவில் அதிகபட்சமாக பெருங்களூரில் 77 மி.மீ மழை பதிவானது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை மற்றும் இரவில் பரவலாக மழை பெய்தது. பல இடங்களில் கனமழை பெய்தது. இதன்படி, திங்கள்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப் பொழிவு விவரம் (மி.மீயில்):
ஆதனக்கோட்டை- 46, பெருங்களூர்- 77, புதுக்கோட்டை- 27, ஆலங்குடி- 38.60, கந்தர்வகோட்டை- 27, கறம்பக்குடி- 32.20, மழையூர்- 53.60, திருமயம்- 5.60, அரிமளம்- 5, அறந்தாங்கி- 4, ஆயிங்குடி- 26.20, நாகுடி- 10.20, மணமேல்குடி- 5, கட்டுமாவடி- 9, இலுப்பூர்- 19, குடுமியான்மலை- 20, அன்னவாசல்- 42, விராலிமலை- 10.20, உடையாளிப்பட்டி- 71, கீரனூர்- 10.20, பொன்னமராவதி- 2, காரையூர்- 67.40. மாவட்டத்தின் சராசரி மழை- 24.33 மி.மீ.

ADVERTISEMENT
ADVERTISEMENT