புதுக்கோட்டை

புதுப்பிக்கப்பட்ட அண்ணா சிலை திறப்பு

17th Sep 2019 09:01 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ. 5 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா சிலையை மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவர் ராமையா, தொலைத்தொடர்பு ஆலோசனைக் குழு உறுப்பினர் க. பாஸ்கர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பழுதடைந்திருந்த அண்ணா சிலை ரவுண்டானா புதுப்பித்தல், நீரூற்று அமைத்தல், சிலைக்கு வண்ணம் அடித்தல், ஸ்டீல் படிக்கட்டு அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு அண்ணா சிலை ரவுண்டானா புதுப்பொலிவுடன் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT