கந்தர்வகோட்டை அருகே திருடிய ஆட்டை விற்பனை செய்தபோது ஏற்பட்ட தகராறு தொடர்பாக 4 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கந்தர்வகோட்டை அருகே மோகனூரில் உள்ள கிடையில் உள்ள ஆடுகள் இரவு நேரங்களில் திருடுபோவதாக அப்பகுதி விவசாயிகள் காவல்நிலையத்தில் புகார் செய்துவந்தனர்.
இந்நிலையில் மட்டாங்கால் கிராமம் அருகில் சிலர் ஆடு விற்பனை செய்துள்ளனர். அப்போது, விற்பனையாளர்களுக்கும், ஆடு வாங்க வந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் சுற்றிவளைத்து விசாரணை செய்ததில் அவை திருட்டு ஆடுகள் என தெரியவந்தது. இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸார் நடத்திய விசாரணை முடிவில், புதுவிடுதியைச் சேர்ந்த அப்பாத்துரை மகன் ராமலிங்கம் (28), முருகேசன் மகன் முரளி (28 ), முள்ளிக்காப்பட்டியைச் சேர்ந்த முனியாண்டி மகன் ஐயப்பன் (26), மூக்கையன் மகன் பழனி (25) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.