தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின், புதுக்கோட்டை மேற்கு மாவட்ட ஒன்றியத்திற்கான நிர்வாகிகள் கூட்டம் சித்தன்னவாசல் பூங்காவில் அண்மையில் நடைபெற்றது.
மேற்கு மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அன்னவாசல் ஊராட்சி
ஒன்றிய ஊராட்சி செயலாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
ஒன்றிய தலைவராக சக்திவேல் (கிளிக்குடி ஊராட்சி), செயலாளராக கிருஷ்ணமூர்த்தி (இருந்திரப்பட்டி ஊராட்சி), பொருளாளராக வெள்ளைச்சாமி (மதியநல்லூர் ஊராட்சி), கெளரவத் தலைவராக சிதம்பரம் (குடுமியான்மலை ஊராட்சி), துணை தலைவராக பாலசுப்பிரமணியன் (சத்தியமங்களம் ஊராட்சி) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.