ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தில் உள்ள அய்யனார் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கொத்தமங்கலம் சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள அய்யனார் கோயிலில் நடைபெற்று வந்த திருப்பணிகள் அண்மையில் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து, குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, திங்கள்கிழமை அதிகாலை முதல் கோயில் வளாகத்தில் யாக பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, புனித நீர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க
அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. தொடர்ந்து, அன்னதானம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.