புதுக்கோட்டை

தகவல் தொழில்நுட்பக் கருத்தரங்கு

13th Sep 2019 09:49 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தகவல் நுட்பவியல் துறை "ஸ்பெக்ட்ரா'' சங்கத்தின் சார்பில் சிறப்புக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
அபுதாபி சுகாதாரத் துறையில் முதுநிலை தகவல் தொடர்பு வளர்ச்சி அலுவலராகப் பணிபுரியும் உபயதுல்லா ஷாஜகான் கருத்தரங்கில் பங்கேற்று, கிளாவ்ட் ஸ்டோரேஜ் மற்றும் டாட்நெட் தகவல் தொழில்நுட்பத்தில் தற்போதைய வேலை வாய்ப்பு குறித்து விளக்கிப் பேசினார்.
கருத்தரங்குக்கு தகவல் நுட்பத் துறைத் தலைவர் இரா. மணிமாறன் தலைமை வகித்தார். முன்னதாக மாணவி  து. செளந்தர்யா வரவேற்றார். மாணவி பிருந்தா நன்றி கூறினார். இதில் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT