புதுக்கோட்டை

மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

7th Sep 2019 10:22 AM

ADVERTISEMENT

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுக்கோட்டையில் மின்வாரிய ஊழியர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மின் வாரியத்தில் உள்ள அனைத்துக் காலிப் பணியிடங்களையும் விரைவில் நிரப்ப வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். 2018 டிச. 1ஆம்  தேதி முதல் மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்த குழுவை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியூ சார்பில் புதுக்கோட்டை மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்டச் செயலர் நடராஜன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் க. முகமதலிஜின்னா, செயலர் ஏ. ஸ்ரீதர் உள்ளிட்டோரும் பேசினர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT