புதுக்கோட்டை

மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

7th Sep 2019 10:19 AM

ADVERTISEMENT

தங்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதிய கல்விக் கொள்கை 2019-ஐ முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்.  தொடக்கக் கல்வியை  அழிக்கும் அரசாணை 145-ஐ உடனடியாக திரும்பபெறவேண்டும்.
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள்- பணியாளர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள 17-பி 
ஓழுங்கு நடவடிக்கைகள், பணிமாறுதல்களை ரத்து செய்திட வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் 
என்பன உள்ளிட்ட  9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 புதுக்கோட்டை திலகர் திடலில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் செல்வராஜ், ரெங்கசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். 
பல்வேறு சங்கங்களின்நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தொடர்ந்து முழக்கங்களும் எழுப்பப்பட்டன.
அறந்தாங்கியில்...
அறந்தாங்கி பழைய வட்டா ட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் துணைச் செயலர் இ.சகாய அருள்சாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆசிரியர் முன்னணி சார்பில் கணேசன் மற்றும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கவிதா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
அரசு ஊழியர் மற்றும் ஆசிரிய சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
பொன்னமராவதியில் : பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர் மணிக்குமார், ஆசிரியர் மன்றப் பொறுப்பாளர் செ.மாணிக்கம்  தலைமைவகித்தனர். 
ஜாக்டோ-ஜியோ மாவட்டத் தலைவர் அழகப்பன், மாவட்டப் பொருளர் தேவகுமார், சத்துணவு ஊழியர் சங்க பொறுப்பாளர் மகாராசன், மாவட்டத் துணைச் செயலர் புவியரசு, ஒன்றியத் துணைச் செயலர் பால்ராஜ், மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் தேவேந்திரன், மகளிரணி பொறுப்பாளர் கோமதி  ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப்பேசினர்.   
நிறைவில்  செயற்குழு உறுப்பினர் கமல்ஹாசன் நன்றி கூறினார்.
கந்தர்வகோட்டையில் : கந்தர்வகோட்டை  ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,  சங்க நிர்வாகிகள் சக்திவேல் , காமராஜ் , கீதா  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT