புதுக்கோட்டை

பாலிடெக்னிக் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கு

7th Sep 2019 10:20 AM

ADVERTISEMENT

கந்தர்வகோட்டை அருகிலுள்ள புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், பகடிவதை  தடுப்பு குறித்த  விழிப்புணர்வுக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கருத்தரங்குக்கு  கல்லூரி முதல்வர் பா. தமிழ்ச்செல்வம் தலைமை வகித்தார். கந்தர்வகோட்டை காவல் உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி பகடிவதை விழிப்புணர்வு, தடுப்பு முறைகள், புகார் தெரிவித்தல், பகடிவதைக்கான  தண்டனைச் சட்டங்கள்  பற்றி எடுத்துரைத்து பேசினார்.
கல்லூரித் துறைத் தலைவர்கள் எஸ். கிருஷ்ணவேனி,  அ . புவனேசுவரி,  எம். வீரப்பன் , வெ . முத்தைய்யா , த . சபரி உள்ளிட்டோர்  கருத்தரங்கில் பங்கேற்றநர். நிறைவில் சா . சையத்ஆலம் நன்றிகூறினார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT