புதுக்கோட்டை

நாட்டின் முன்னேற்றத்துக்கு முக்கிய பங்கு வகிப்பது விவசாயிகள்தான்

7th Sep 2019 10:22 AM

ADVERTISEMENT

நாட்டின் முன்னேற்றத்துக்கு விவசாயிகள்தான் முக்கிய பங்கை வகிக்கின்றனர் என்றார் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி.
 புதுக்கோட்டை மாவட்டம், வடமலாப்பூரியில்  வெள்ளிக்கிழமைஇயற்கை விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தில் பாரம்பரிய விதைத் திருவிழாவைத் தொடங்கி வைத்து, விவசாயிகளுக்கு பாரம்பரிய விதைகளை வழங்கிப் பேசியது:
ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு விவசாயிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். வேளாண் 
துறையில் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதுதன் மூலம், வேளாண் உற்பத்தியைப் பெருக்கி அதிக லாபம் பெறலாம். 
பாரம்பரிய விதைகளை பெறும் விவசாயிகள் நல்ல முறையில் பயிர் செய்து அதிக விளைச்சல் மற்றும் வருமானம் பெற வேண்டும் என்றார் அவர்.
திருவிழாவில் வேளாண் இணை இயக்குநர் மு. சுப்பையா, நபார்டு வங்கி மேலாளர் ஜெயஸ்ரீ, புதுக்கோட்டை இயற்கை விவசாய உற்பத்தியாளர் நிறுவன நிர்வாக இயக்குநர் ஆதப்பன், இயக்குநர் ஜி.எஸ். தனபதி உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் முன்னோடி விவசாயியும் மூத்த தமிழறிஞருமான க. நெடுஞ்செழியன், சூழலியல் செயற்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா உள்ளிட்டோரும் பேசினர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT