புதுக்கோட்டை

தலைமையாசிரியர் பணிமாறுதலை கண்டித்து போராட்டம்

7th Sep 2019 10:22 AM

ADVERTISEMENT

பொய்யான புகாரில் வாழைக்குறிச்சி பள்ளித் தலைமையாசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, வகுப்புகளைப் புறக்கணித்து மாணவ, மாணவிகள் தங்கள்பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாழைக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரியும் முத்துச்சாமி, மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய சொல்வதாக கூறி தவறான விடியோ வெளியிடப்பட்டதாம். இதனால் முத்துசாமி பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், எந்த தவறும் செய்யாத தங்களது தலைமையாசிரியர் மீண்டும் தங்கள் பள்ளிக்கு வரவேண்டும் என வலியுறுத்தி, பள்ளி மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை வகுப்புகளைப்  புறக்கணித்து பெற்றோர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT