புதுக்கோட்டை

சுகாதார ஆய்வாளர்கள் போராட்டம்

7th Sep 2019 10:21 AM

ADVERTISEMENT

அன்னவாசல், இலுப்பூர் பகுதி உள்பட புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், வியாழக்கிழமை  கருப்பு பட்டை அணிந்து சுகாதார ஆய்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் 5000 மக்கள் தொகைக்கு ஒருவர் வீதம், தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதற்கு பின்பு காலியிடங்களை முறையாக நிரப்பப்படவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் மாநிலம் முழுவதும் இந்த பணியிடங்களும் 5700 ஆக குறைக்கப்பட்டது. 
இந்நிலையில் மீண்டும் சுகாதார ஆய்வாளர்களின் எண்ணிக்கையை குறைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி களப்பணிக்கு 1600 ஆய்வாளர் பணியிடங்களாகவும், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 1800 பணியிடங்களாகவும் குறைக்கப்பட்டது. 
அரசின் இந்த ஆணையை கண்டித்து இலுப்பூர், அன்னவாசல், முக்கண்ணாமலைப்பட்டி, பரம்பூர், நார்த்தாமலை, புல்வயல், பெருமநாடு, மதியநல்லூர், ராப்பூசல், மலைக்குடிப்பட்டி உள்ளிட்ட அரசு ஆரம்ப  சுகாதார நிலைய ஆய்வாளர்கள் கருப்புபட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT